ஆஸ்திரேலியாவின் வடமேற்குக் கடற்கரையின் ஒரு பகுதியில் 41.6 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலான அதிகபட்ச குளிர்கால வெப்பநிலை பதிவாகியுள்ளது.
இது முந்தையப் பதிவை விட 0.4 C அதிகமாக உள்ளது.
41.2C என்ற முந்தைய அதிகபட்ச அளவானது 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெஸ்ட் ரோபக் அருகிலுள்ள பகுதியில் பதிவானது.
ஆஸ்திரேலியாவின் சுமார் 18 சதவீதப் பகுதியானது பாலைவனமாகவும், ஆண்டு முழுவதும் அதிக வெப்பம் கொண்டதாக மித வெப்ப மண்டலம் என்ற நிலையில் இருந்து சற்று விலகியதாகக் குறிக்கப்படுகிறது.
ஜனவரி முதல் ஜூலை மாதம் வரை, உலக வெப்பநிலை 1991-2020 ஆம் கால கட்டத்தில் இருந்த சராசரியை விட 0.7C அதிகமாக இருந்தது.