TNPSC Thervupettagam

வரலாறு காணாத மந்தநிலையில் இந்தியா

November 18 , 2020 1471 days 640 0
  • இந்திய ரிசர்வ் வங்கியானது முதன்முறையாக ‘nowcast’ என்பதை வெளியிட்டுள்ளது.
  • இது உயர் அதிர்வெண் தரவை அடிப்படையாகக் கொண்ட ஒரு மதிப்பீடாகும்.
  • இந்தியா தனது வரலாற்றில் முதல் முறையாக 2020-21 ஆம் ஆண்டின் முதல் பாதியில் தொழில்நுட்ப ரீதியிலான பொருளாதார மந்த நிலைக்குள் (இரண்டு காலாண்டுகளாகத் தொடர்ந்து பொருளாதார மந்தநிலை) நுழைந்துள்ளது.
  • ரிசர்வ் வங்கியின் கூற்றுப்படி, இந்தியாவின் பொருளாதாரம் இரண்டாவது காலாண்டிலும் (ஜூலை முதல் செப்டம்பர் வரை) சரிந்துள்ளது.
  • செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.6 சதவீதமாக சுருங்கி உள்ளது.
  • ஏப்ரல் முதல் ஜூன் வரை பொருளாதாரம் சுமார் 24 சதவீதம் வரை சரிந்துள்ளது.
  • மந்தநிலை என்ற சொல் பொருளாதாரத்தின் பொதுவான நடவடிக்கைகளில் ஏற்படும் குறிப்பிடத்தக்க சரிவைக் குறிக்கிறது.
  • மொத்த உள்நாட்டு உற்பத்தியின் நிலையைக் கணக்கில் கொண்டு, இது இரண்டு காலாண்டுகளாக தொடர்ச்சியான பொருளாதார வீழ்ச்சியின் நிலையாக அங்கீகரிக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்