வரலாற்றில் அதிக வெப்பநிலை பதிவாகியுள்ள மாதம் – 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம்
August 14 , 2019 2085 days 790 0
1880 ஆம் ஆண்டு காலநிலை குறித்த ஆய்வுகள் தொடங்கியதிலிருந்து அதிக வெப்ப நிலை பதிவாகியுள்ள மாதம் 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் என்று உலக வானிலை அமைப்பு அறிவித்துள்ளது.
2019 ஆம் ஆண்டு ஜூலை மாதமானது தொழிற்துறை நடவடிக்கைகளுக்கு முந்தைய நிலையை விட அதிகமாக ஏறத்தாழ 1.2º செல்சியஸ் வெப்ப நிலையைப் பதிவு செய்துள்ளது.
இதற்கு முன்பு அதிக வெப்ப நிலையைப் பதிவு செய்துள்ள மாதம் 2016 ஆம் ஆண்டு ஜூலை. இதனுடன் குறைந்தபட்சம் ஒன்றிப் பொருந்துமாறு 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் உள்ளது.
விழிப்பு நிலை: 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதமானது எல் நினோவின் காரணமாக வெப்பமுடைய மாதமாக இருந்தது. ஆனால் 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதமானது எல் நினோ இல்லாமல் வெப்பமுடைய மாதமாக இருக்கின்றது.
உடனடியான விளைவுகள் : கிரீன்லாந்து, ஆர்டிக், ஐரோப்பியப் பனியாறுகள் ஆகியவற்றிலிருந்து அதிக அளவில் பனிக்கட்டிகள் உருகுதல், ஆர்டிக்கில் காட்டுத் தீ ஏற்படுதல் போன்றவையாகும்.