164 ஆண்டுகளுக்குப் பிறகு, சிம்லாவில் உள்ள சாட்விக் மாளிகையில் தலைமைக் கணக்குத் தணிக்கையகமானது தனது முதல் அருங்காட்சியகத்தினைப் பெற்றுள்ளது.
1946 ஆம் ஆண்டு இந்தியாவிற்கான அமைச்சரவைத் தூதுக் குழுவின் வருகையின் போது M.K. காந்தி சாட்விக் மாளிகையில் தங்கியிருந்தார்.
சுதந்திரத்திற்குப் பிறகு, 1950 ஆம் ஆண்டில், இந்தியத் தணிக்கை மற்றும் கணக்குச் பணிக்கான தகுதிகாண் பயிற்சியாளர்களுக்கான முதல் பயிற்சிப் பள்ளி இங்கு தொடங்கப் பட்டது.