வருமான வரித்துறை மற்றும் சரக்கு மற்றும் சேவைகள் வரி அமைப்பு (Goods and Services Tax Network - GSTN) ஆகியவை வரி ஏய்ப்பைக் கண்டறிவதற்காக ஒன்றிணைந்து பணியாற்றத் திட்டமிருக்கின்றன.
இரண்டு அமைப்புகளின் தகவல்களையும் பொருத்திப் பார்ப்பதற்காக இரு அமைப்புகளையும் அனுமதிப்பதற்காக ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.
வருமான வரி மற்றும் GST ஆகியவற்றின் கீழ் சமர்ப்பிக்கப்பட்ட வருமானத் தொகையானது சோதனை செய்யப்பட்டு சரிபார்க்கப்பட விருக்கின்றது.
வருமான வரித் துறையின் உத்தரவானது இது போன்ற தகவல்களை GSTN அமைப்புடன் தானியங்கு பரிமாற்றத்திற்கு அனுமதிக்கின்றது.
GSTN
GSTN ஆனது இலாப நோக்கில்லா நிறுவனமாக மத்திய மற்றும் மாநில அரசுகளால் கூட்டாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது நிறுவனங்கள் சட்டம், 2013-ன் பிரிவு 8-ன் கீழ் ஒரு நிறுவனமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
GSTN அமைப்பின் பணி சரக்கு மற்றும் சேவை வரியினை (GST) செயல்படுத்துவதற்காக தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு மற்றும் சேவைகளை வழங்குவதாகும்.