இந்த அறிக்கையானது வரி நீதி வலையமைப்பினால்- Tax Justice Network- வெளியிடப் பட்டுள்ளது.
உலக நாடுகள் ஆனது, உலக வரி முறைகேடுகளால் ஆண்டிற்குள் சுமார் 492 பில்லியன் அமெரிக்க டாலர்களை இழந்து வருகின்றன.
இந்த இழப்பில் சுமார் பாதி அளவானது (43%) ஆஸ்திரேலியா, கனடா, இஸ்ரேல், ஜப்பான், நியூசிலாந்து, தென் கொரியா, ஐக்கியப் பேரரசு மற்றும் அமெரிக்கா போன்ற எட்டு நாடுகளில் பதிவாகியுள்ளன.
இதில் மூன்றில் இரண்டு பங்கு (347.6 பில்லியன் அமெரிக்க டாலர்) ஆனது, வரிக் குறைப்பு போன்ற பல்வேறு வரி ஏய்ப்பு நடவடிக்கைகளுக்காக வெளிநாடுகளுக்கு இலாபத்தினைப் பரிமாற்றும் பன்னாட்டு நிறுவனங்களால் இழக்கப்படுகிறது.
மீதமுள்ள மூன்றில் ஒரு பங்கு (144.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) செல்வந்தர்கள் தங்கள் செல்வ வளங்களை வெளிநாடுகளில் மறைத்து வைப்பதன் ஒரு காரணமாக இழக்கப் படுகின்றன.
உலகின் வடக்கு நாடுகள் ஆனது முழுமையான வரி வருவாயில் மிகப்பெரிய அளவில் தொகையை இழக்கின்றன.
உலகின் தெற்கு நாடுகள் ஆனது, தங்கள் வரி வருவாயில் ஒரு பங்காக மிக அதிகபட்ச இழப்புகளைச் சந்திக்கின்றன.