TNPSC Thervupettagam

வரி சார் நீதியின் நிலை குறித்த அறிக்கை 2024

December 4 , 2024 18 days 68 0
  • இந்த அறிக்கையானது வரி நீதி வலையமைப்பினால்- Tax Justice Network- வெளியிடப் பட்டுள்ளது.
  • உலக நாடுகள் ஆனது, உலக வரி முறைகேடுகளால் ஆண்டிற்குள் சுமார் 492 பில்லியன் அமெரிக்க டாலர்களை இழந்து வருகின்றன.
  • இந்த இழப்பில் சுமார் பாதி அளவானது (43%) ஆஸ்திரேலியா, கனடா, இஸ்ரேல், ஜப்பான், நியூசிலாந்து, தென் கொரியா, ஐக்கியப் பேரரசு மற்றும் அமெரிக்கா போன்ற எட்டு நாடுகளில் பதிவாகியுள்ளன.
  • இதில் மூன்றில் இரண்டு பங்கு (347.6 பில்லியன் அமெரிக்க டாலர்) ஆனது, வரிக் குறைப்பு போன்ற பல்வேறு வரி ஏய்ப்பு நடவடிக்கைகளுக்காக வெளிநாடுகளுக்கு இலாபத்தினைப் பரிமாற்றும் பன்னாட்டு நிறுவனங்களால் இழக்கப்படுகிறது.
  • மீதமுள்ள மூன்றில் ஒரு பங்கு (144.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) செல்வந்தர்கள் தங்கள் செல்வ வளங்களை வெளிநாடுகளில் மறைத்து வைப்பதன் ஒரு காரணமாக இழக்கப் படுகின்றன.
  • உலகின் வடக்கு நாடுகள் ஆனது முழுமையான வரி வருவாயில் மிகப்பெரிய அளவில் தொகையை இழக்கின்றன.
  • உலகின் தெற்கு நாடுகள் ஆனது, தங்கள் வரி வருவாயில் ஒரு பங்காக மிக அதிகபட்ச இழப்புகளைச் சந்திக்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்