TNPSC Thervupettagam

வரித்தலை வாத்து

February 5 , 2023 664 days 356 0
  • 2010 ஆம் ஆண்டுக்குப் பிறகு, சென்னை பள்ளிக்கரணையில் வரித்தலை வாத்து தென் படுவது இதுவே முதல்முறையாகும்.
  • இது உலகிலேயே மிக அதிக உயரத்தில் பறக்கக் கூடிய பறவைகளில் ஒன்றாக கருதப் படுகிறது.
  • மத்திய ஆசியாவை பூர்வீகமாகக் கொண்ட இந்தப் பறவையானது தெற்காசியாவில், அசாம் முதல் தமிழ்நாடு வரையிலான பகுதிகளில் தனது குளிர்கால வாசத்தினைக் கழிப்பதற்காக இமயமலையினைக் கடந்து புலம்பெயருவதாக அறியப் படுகிறது.
  • முன்னதாக இவை தென்பட்ட அரிதான நிகழ்வுகளில், 2018 ஆம் ஆண்டில், சில நிகழ்வுகள் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் அமைந்த புலிகாட் ஏரியின் முனைப் பகுதியிலும், இரண்டு நிகழ்வுகள் காஞ்சிபுரத்திலும் மற்றும் ஐந்து நிகழ்வுகள் கேளம்பாக்கம் சிற்றோடைப் பகுதியிலும் தென்பட்டன.
  • பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் 2010 ஆம் ஆண்டு முதல் கிட்டத்தட்ட 193 வகையான பறவைகள் காணப்பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்