2010 ஆம் ஆண்டுக்குப் பிறகு, சென்னை பள்ளிக்கரணையில் வரித்தலை வாத்து தென் படுவது இதுவே முதல்முறையாகும்.
இது உலகிலேயே மிக அதிக உயரத்தில் பறக்கக் கூடிய பறவைகளில் ஒன்றாக கருதப் படுகிறது.
மத்திய ஆசியாவை பூர்வீகமாகக் கொண்ட இந்தப் பறவையானது தெற்காசியாவில், அசாம் முதல் தமிழ்நாடு வரையிலான பகுதிகளில் தனது குளிர்கால வாசத்தினைக் கழிப்பதற்காக இமயமலையினைக் கடந்து புலம்பெயருவதாக அறியப் படுகிறது.
முன்னதாக இவை தென்பட்ட அரிதான நிகழ்வுகளில், 2018 ஆம் ஆண்டில், சில நிகழ்வுகள் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் அமைந்த புலிகாட் ஏரியின் முனைப் பகுதியிலும், இரண்டு நிகழ்வுகள் காஞ்சிபுரத்திலும் மற்றும் ஐந்து நிகழ்வுகள் கேளம்பாக்கம் சிற்றோடைப் பகுதியிலும் தென்பட்டன.
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் 2010 ஆம் ஆண்டு முதல் கிட்டத்தட்ட 193 வகையான பறவைகள் காணப்பட்டன.