மேற்கு கமெங் மாவட்டத்தில் உள்ள லிஷ் என்ற கிராமத்தில் ஓர் அரிய வலசை போகும் பறவை இனமான வரித்தலை வாத்து மீட்கப்பட்டுள்ளது.
ஆசியா மற்றும் ஐரோப்பியப் பகுதிகள் முழுவதும் வலசை போகும் வரித்தலை வாத்து ஆனது, IUCN அமைப்பின் செந்நிறப் பட்டியலில் 'தீவாய்ப்பு கவலை குறைந்த இனம்’ ஆகப் பட்டியலிடப்பட்டுள்ளது.
இது உலகின் மிக உயரமாக பறக்கும் பறவைகளில் ஒன்றாக அறியப்படுகிறது.