வரித்தலை வாத்து (அன்சர் இன்டிகஸ்) உலகின் மிக உயரமான பறக்கும் பறவைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
இவை மத்திய ஆசிய நாடுகளைத் தாயகமாகக் கொண்டவையாகும்.
இந்த இனங்களானது 12,000 முதல் 14,000 அடி உயரம் வரையிலான மிக உயரமான மலைகளின் வழியாக பறக்கும் திறன் கொண்டது.
இவை தெற்காசியாவில், தெற்கே தீபகற்ப இந்தியா வரையிலும் தனது குளிர் காலத்தினைக் கழிப்பதோடு, இவை இமயமலையைக் கடப்பதற்கு முன்பாக திபெத், கஜகஸ்தான், மங்கோலியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளிலிருந்து தெற்கே இடம் பெயர்கின்றன.
இந்த வரித்தலை வாத்துகள் ஒரு நாளில் 1,609 கிலோமீட்டர் தொலைவிற்கு மேல் இடம் பெயர்கின்றன.
கடந்த சில நாட்களாக ஒடிசாவின் ருஷிகுல்யா ஆற்றில் சுமார் ஆயிரம் வரித்தலை வாத்துக்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன.