TNPSC Thervupettagam

வரித்தலை வாத்து

December 30 , 2022 569 days 386 0
  • வரித்தலை வாத்து (அன்சர் இன்டிகஸ்) உலகின் மிக உயரமான பறக்கும் பறவைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
  • இவை மத்திய ஆசிய நாடுகளைத் தாயகமாகக் கொண்டவையாகும்.
  • இந்த இனங்களானது 12,000 முதல் 14,000 அடி உயரம் வரையிலான மிக உயரமான மலைகளின் வழியாக பறக்கும் திறன் கொண்டது.
  • இவை தெற்காசியாவில், தெற்கே தீபகற்ப இந்தியா வரையிலும் தனது குளிர் காலத்தினைக் கழிப்பதோடு, இவை இமயமலையைக் கடப்பதற்கு முன்பாக திபெத், கஜகஸ்தான், மங்கோலியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளிலிருந்து தெற்கே இடம் பெயர்கின்றன.
  • இந்த வரித்தலை வாத்துகள் ஒரு நாளில் 1,609 கிலோமீட்டர் தொலைவிற்கு மேல் இடம் பெயர்கின்றன.
  • கடந்த சில நாட்களாக ஒடிசாவின் ருஷிகுல்யா ஆற்றில் சுமார் ஆயிரம் வரித்தலை வாத்துக்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்