TNPSC Thervupettagam

வரியில்லா இறக்குமதித் திட்டத்திற்கான தகுதி நீக்கம்

June 3 , 2019 1908 days 584 0
  • மே 31 அன்று வளர்ந்து வரும் நாடுகளுக்கான வரியில்லா இறக்குமதித் திட்டத்திற்கான இந்தியாவின் தகுதி நிலையை அமெரிக்கா நீக்கியுள்ளது.
  • அமெரிக்க வர்த்தக சட்டங்கள் தொடர்பானவற்றின் கீழ் அமெரிக்க நிறுவனங்களுக்கு “அதன் சந்தைகளுக்கு நியாயமான மற்றும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு அணுகலை வழங்கும்” என்ற உத்தரவாதத்தை இந்தியா அளிக்காததன் காரணமாக அமெரிக்கா இந்நடவடிக்கையை எடுத்துள்ளது.
  • இதன்படி, 2019 ஆம் ஆண்டு ஜூன் 05 ஆம் தேதியன்று இந்தியாவிற்கான அதன் முன்னுரிமை வர்த்தக முறையை நீக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
  • இந்த வரியில்லாத் திட்டத்தின் மிகப்பெரிய பயனாளி இந்தியா ஆகும். இத்திட்டத்தின் கீழ் வரியில்லாமல் 120 நாடுகளைச் சேர்ந்த சில இறக்குமதிப் பொருட்கள் அமெரிக்காவிற்குள் நுழைகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்