TNPSC Thervupettagam

வரியில்லாத வர்த்தக உத்தி – இந்தியா

March 17 , 2025 14 days 59 0
  • சமீபத்தில், இந்திய ஜவுளித் தொழில்துறைக் கூட்டமைப்பு (CITI) ஆனது, ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைத் துறையில் அமெரிக்காவுடன் வரியில்லாத வர்த்தக ஒப்பந்தத்தினைப் பரிந்துரைத்துள்ளது.
  • இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் ஆனது, 2030 ஆம் ஆண்டிற்குள் இரண்டு ஆண்டுகளுக்கு இடையிலான இருதரப்பு வர்த்தகத்தினை 500 பில்லியன் டாலராக இரட்டிப்பாக்க ஒப்புக் கொண்டுள்ளன.
  • மேலும், 2025 ஆம் ஆண்டின் இலையுதிர்காலத்தில் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தின் முதல் கட்டம் குறித்த பேச்சுவார்த்தையினை மேற்கொண்டு வருகின்றன.
  • இதில் வரியில்லாத வர்த்தக வரி என்பது இரு நாடுகளும் ஒரு முழுமையான வரிகளை விதிப்பதற்கு அல்லது பரந்த வர்த்தக ஒப்பந்தத்தினை மேற்கொள்வதற்குப் பதிலாக, குறிப்பிட்டத் தயாரிப்பு வகைகளை அடையாளம் கண்டு அவற்றின் மீதான வரிகளை நீக்கக் கூடிய ஓர் அணுகுமுறையாகும்.
  • இந்தியா, 2024 ஆம் ஆண்டில் அமெரிக்காவுடன் சுமார் 46 பில்லியன் டாலர்கள் என்ற  மதிப்பிலான வர்த்தக உபரியைக் கொண்டிருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்