இந்திய அரசின் முயற்சிகளால் 2015 ஆம் ஆண்டு முதல் காசநோய் பாதிப்பு சுமார் 16% சதவீதமும் (ஒவ்வோர் ஆண்டும் புதிய பாதிப்புகள் பதிவாகின்றன) மற்றும் காச நோயால் ஏற்படும் உயிரிழப்பு விகிதம் சுமார் 18% சதவீதமும் குறைந்துள்ளது.
2023 ஆம் ஆண்டில் சுமார் 2.3 லட்சம் கண்டறியப்படாத மற்றும் பதிவு செய்யப்படாத பதிவுகள் இருந்தன என்ற நிலையில், இது அதற்கு முந்தைய ஆண்டில் 3.2 லட்சமாக இருந்தது என்று அறிக்கை கூறுகிறது.
அரசாங்கத்தின் Ni-kshay என்ற இணைய தளமானது அனைத்து வகை காசநோய் நோயாளிகளையும் கண்காணித்து வருவதையடுத்து இந்த இடைவெளியானது பல ஆண்டுகளாக குறைந்து வருகிறது.
2023 ஆம் ஆண்டில் பதிவான சுமார் 25.5 லட்சம் பாதிப்புகளில் 33% அல்லது 8.4 லட்சம் பாதிப்புகள் தனியார் துறையினால் பதிவு செய்யப்பட்டவை.
இதனை ஒப்பிடுகையில், 2015 ஆம் ஆண்டில் தனியார் துறையில் சுமார் 1.9 லட்சம் பாதிப்புகள் மட்டுமே பதிவாகியுள்ளன.
முந்தைய ஆண்டில் 27.4 லட்சமாக இருந்த காசநோய்ப் பாதிப்பு ஆனது, 2023 ஆம் ஆண்டில் 27.8 லட்சமாக சற்று அதிகரித்துள்ளது.
சமீபத்தியத் தரவுகளின்படி, நோய்த் தொற்று காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகள் ஆனது 3.2 லட்சமாக இருந்தது.
இந்தியாவில் 2021 ஆம் ஆண்டில் 4.94 லட்சமாக இருந்த காசநோய் உயிரிழப்பு ஆனது, 2022 ஆம் ஆண்டில் 3.31 லட்சமாகக் குறைந்துள்ளது.
2021 ஆம் ஆண்டில் முந்தைய மதிப்பீட்டு முறையின் படி மேற்கொள்ளப்பட்ட பல தரவுகளின் படி சுமார் 29.4 லட்சமாக இருந்த ஓராண்டில் பதிவான பாதிப்புகளின் எண்ணிக்கையானது 2022 ஆம் ஆண்டில் 27.4 லட்சமாகக் குறைந்துள்ளது.