TNPSC Thervupettagam

வருடாந்திர உலகப் போதைப்பொருள் அறிக்கை 2024

July 5 , 2024 141 days 237 0
  • ஐக்கிய நாடுகள் சபையின் போதைப்பொருள் மற்றும் குற்றங்களுக்கான அலுவலகம் (UNODC), உலக போதைப்பொருள் தினத்தன்று இந்த அறிக்கையை வெளியிட்டது.
  • 2022 ஆம் ஆண்டு வரையிலான கடந்த பத்தாண்டுகளில், சட்டவிரோத போதைப் பொருட்களைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 292 மில்லியனாக அதிகரித்து உள்ளது.
  • உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான மக்கள் - 228 மில்லியன் மக்கள் - கஞ்சாவை உட்கொள்கிறார்கள் என்ற நிலைமையில் அதைத் தொடர்ந்து ஓபியாய்டுகள், ஆம்பெடமைன்கள், கொகைன் மற்றும் எக்ஸ்டஸி போன்ற போதைப் பொருட்களைப் பயன்படுத்துகின்றனர்.
  • நிட்டாசீன்களின் பயன்பாடு அதிகரித்ததைத் தொடர்ந்து அதிகப்படியான போதைப் பொருள் பயன்பாடு காரணமான உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன.
  • 2022 ஆம் ஆண்டில், கோக்கைன் உற்பத்தியானது 2,757 டன்கள் பதிவாகி சாதனை உச்சத்தைத் தொட்ட நிலையில், இது 2021 ஆம் ஆண்டில் இருந்த அளவை விட 20 சதவீதம் அதிகரித்துள்ளது.
  • கனடா, உருகுவே மற்றும் அமெரிக்காவில் உள்ள 27 நிர்வாக அதிகார வரம்புகள் முழுவதும் கஞ்சா பயன்பாடு சட்டப்பூர்வமாக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்