TNPSC Thervupettagam

வருடாந்திர எல்லை அறிக்கை 2022

March 29 , 2022 846 days 436 0
  • ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பானது 2022 ஆம் ஆண்டிற்கான வருடாந்திர எல்லை என்ற அறிக்கையினை சமீபத்தில் வெளியிட்டது.
  • இரைச்சல், பிழம்புகள், பொருத்தமின்மைகள் : அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் (Noise, Blazes, and Mismatches: Emerging Issues of Environmental Concern)  என்று இந்த அறிக்கைக்குத் தலைப்பிடப் பட்டது.
  • இந்தப் புதிய அறிக்கையில், காட்டுத்தீ, ஒலி மாசுபாடு மற்றும் பிற சுற்றுச்சூழல் அச்சுறுத்தல்கள் பரவலான சுற்றுச்சூழல் சேதத்தினை ஏற்படுத்தும் எனவும் அவற்றை விரைவாகக் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பு கூறியுள்ளது.
  • பருவநிலை மாற்றம், மாசுபாடு மற்றும் உயிரிப் பல்லுயிர்ப் பெருக்க இழப்பு போன்ற புவியின் மூன்று நெருக்கடி நிலைக்குத் தீர்வு காண்பதற்கான அவசியத் தேவையினை இது எடுத்துரைக்கிறது.
  • ஒலி மாசுபாடானது “ஒரு கொடூரமானக் கொலையாளி” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • 2002  மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளுக்கிடையில், சராசரியாக 423 மில்லியன் ஹெக்டேர் நிலப்பரப்புகள் காட்டுத்தீ காரணமாக எரிந்து நாசமானதாக இந்த அறிக்கை கூறுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்