TNPSC Thervupettagam

வருடாந்திர கங்கை டால்பின் கணக்கெடுப்பு

October 12 , 2019 1874 days 745 0
  • எனது கங்கை, எனது டால்பின்’ என்ற பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இயற்கைக்கான உலகளாவிய நிதியத்தின் உறுப்பினர்கள் (இந்தியா) மற்றும் உத்தரப் பிரதேச வனத் துறை உறுப்பினர்கள் ஆகியோர் இணைந்து வருடாந்திர கங்கை டால்பின் கணக்கெடுப்பைத் தொடங்கினர்.
  • ஹஸ்தினாபூர் வனவிலங்கு சரணாலயம் மற்றும் மேல்கங்கை பகுதியில் உள்ள நரோரா ராம்சார் தளம் ஆகியவற்றைச் சேர்ந்த  அதிகாரிகளும் இந்தக் கணக்கெடுப்புக் குழுவில் இணைந்தனர்.
  • டால்பின் கணக்கெடுப்பானது 2015 ஆம் ஆண்டில் முதன்முதலில் தொடங்கப்பட்ட வருடாந்திர டால்பின் கணக்கெடுப்பு பயிற்சியின் ஒரு பகுதியாகும்.
  • மூன்று டால்பின் குட்டிகள் உட்பட, 33 டால்பின்கள் 2018 ஆம் ஆண்டில்  அங்கு காணப்பட்டன.
  • கங்கை நதி டால்பின் ஆனது இந்திய அரசாங்கத்தால் அதன் தேசிய நீர்வாழ் விலங்காக அங்கீகரிக்கப் பட்டுள்ளது.
  • மேலும் இது கவுஹாத்தி நகரத்தின் அலுவல் விலங்காகவும் இருக்கின்றது.
கணக்கெடுப்பு நடத்தப்படும் பகுதிகள்
  • வழக்கமாக இந்தக் கணக்கெடுப்பானது உத்தரப் பிரதேசத்தின் ஹஸ்தினாபூர் வனவிலங்கு சரணாலயத்திற்குள் ஐந்து மாவட்டங்களை உள்ளடக்கிய கங்கை நதியில் உள்ள பிஜ்னோர் தடுப்பணையிலிருந்து நரோரா தடுப்பணை வரை மேற்கொள்ளப் படுகின்றது.
2019 ஆம் ஆண்டில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்படும் கூடுதலான பகுதிகள்
  • இந்தக் கணக்கெடுப்பானது உத்தரகாண்ட் மாநிலத்தின் பிஜ்னோரில் இருந்து தொடங்கி 255 கிலோ மீட்டர் பரப்பளவுள்ள நரோரா தடுப்பணையில் இருக்கும்  ராம்சார் தளம் வரை மேற்கொள்ளப் படுகின்றது.
முறைகள்
  • டேன்டெம் படகுக் கணக்கெடுப்பு முறையைப் பயன்படுத்தி டால்பின் நிபுணரான கில் பிராலிக் என்பவரின் உதவியுடன் இந்தக்  கணக்கெடுப்பானது மேற்கொள்ளப்பட இருக்கின்றது.
  • இது இரண்டு படகுகளைக் கொண்டுள்ளது. இந்தப் படகுகள் ஒவ்வொன்றும் சில பார்வையாளர்கள் மற்றும் ஒரு தரவுப் பதிவாக்க நிபுணரைக் கொண்டிருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்