உலக வங்கியானது சமீபத்தில் 2024 ஆம் ஆண்டின் சர்வதேசக் கடன் அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
அதிக வருமானம் உள்ள பல நாடுகளில் விதிக்கப்படும் நெருக்கடி மிக்க பணவியல் கொள்கைகளானது வட்டி விகிதங்களை 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்த்தி உள்ளது.
வளர்ந்து வரும் நாடுகள் ஆனது, 2023 ஆம் ஆணடில் தங்கள் வெளிநாட்டுக் கடனைச் செலுத்துவதற்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் சுமார் 1.4 டிரில்லியன் டாலர் தொகையினைச் செலவிட்டுள்ளன.
வட்டி செலுத்துதலுக்கானச் செலவினம் சுமார் 33 சதவீதம் அதிகரித்து 406 பில்லியன் டாலராக உள்ளது.
உலகின் மிகவும் ஏழ்மையான மற்றும் மிகவும் பாதிக்கப்படக் கூடிய நாடுகள் இந்த ஆண்டில் 96.2 பில்லியன் டாலர் மதிப்பிலான கடன்களைச் செலுத்தியுள்ளன.
அசல் தொகையினைத் திருப்பிச் செலுத்துதல் ஆனது, சுமார் 8 சதவீதம் குறைந்து 61.6 பில்லியன் டாலராக உள்ள நிலையில், வட்டிச் செலவுகள் இதுவரை இல்லாத அளவுக்கு 34.6 பில்லியன் டாலரினை எட்டியது.
இது ஒரு தசாப்தத்திற்கு முன்பு இருந்ததை விட நான்கு மடங்கு அதிகமாகும்.
மிகக் குறைவான மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளின் ஒருங்கிணைந்த வெளிநாட்டுக் கடனானது 2023 ஆம் ஆண்டின் இறுதியில் 8.8 டிரில்லியன் டாலர்களை எட்டிய நிலையில் இது 2020 ஆம் ஆண்டில் இருந்த அளவினை விட சுமார் 8 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
வங்காளதேசம் மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளானது, 2023 ஆம் ஆண்டில் வட்டித் தொகையில் 90 சதவீதத்திற்கும் அதிகமான அதிகரிப்பைச் சந்தித்துள்ளன.