TNPSC Thervupettagam

வருடாந்திர மரண தண்டனை அறிக்கை 2023

February 16 , 2024 155 days 228 0
  • திட்டம் 39A என்ற ஆலோசனை வழங்கீட்டுக் குழுவினால், ‘இந்தியாவில் மரண தண்டனைகள்: வருடாந்திரப் புள்ளிவிவரங்கள் 2023’ என்ற தலைப்பிலான அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
  • 2023 ஆம் ஆண்டில் ஒரு உயர் நீதிமன்றத்தினால் ஒரே ஒரு மரண தண்டனை மட்டுமே உறுதி செய்யப்பட்ட நிலையில், இது 2000 ஆம் ஆண்டிலிருந்து இதுவரையில் மேல் முறையீட்டு நீதிமன்றங்களில் பதிவான குறைவான விகிதத்தைக் குறிக்கிறது.
  • உறுதிப்படுத்தப்பட்ட கொலை (ஒரு நபரைத் திட்டமிட்டு வேண்டுமென்றே கொலை செய்தல்) வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் ஒரு மரண தண்டனையை உறுதி செய்தது.
  • 2023 ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் எந்தவொரு மரண தண்டனையையும் உறுதி செய்யவில்லை என்ற வகையில், 2021 ஆம் ஆண்டிற்குப் பிறகு இரண்டாவது முறையாக உச்ச நீதிமன்றத்தில் எந்த மரண தண்டனையும் உறுதி செய்யப் பட வில்லை.
  • 2023 ஆம் ஆண்டில் உயர் நீதிமன்றங்களில் நடைபெற்ற வழக்காடுதல்களில் மரண தண்டனையை உறுதிப்படுத்துவதற்கான தீர்ப்பு வழங்குதல் என்பது 15% குறைந்து உள்ளது குறிப்பிடத் தக்கது ஆகும்.
  • 2022 ஆம் ஆண்டில் பதிவான 68 வழக்குகளுடன் ஒப்பிடும் போது 2023 ஆம் ஆண்டில் 57 மரண தண்டனை வழக்குகளுக்குத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
  • 2016 ஆம் ஆண்டில் இருந்ததை விட, 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதிக்குள் மரண தண்டனையின் கீழ் உள்ள கைதிகளின் எண்ணிக்கை 45.71% அதிகரித்துள்ளது.
  • கடந்த ஐந்தாண்டுகளைப் போலவே, விசாரணை நீதிமன்றங்களில் வழக்காடப்படும் பெரும்பாலான மரண தண்டனை வழக்குகளானது பாலியல் குற்றங்கள் தொடர்பான குற்றங்களை உள்ளடக்கியது ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்