TNPSC Thervupettagam

வருடாந்திர மாதிரிக் கணக்கெடுப்பு

October 16 , 2024 37 days 89 0
  • புள்ளிவிவர அமைச்சகம் ஆனது, ஒரு விரிவான வருடாந்திர மாதிரிக் கணக்கெடுப்பை வெளியிட்டுள்ளது (ஜூலை 2022-ஜூன் 2023).
  • கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் கடந்த 365 நாட்களில் மருத்துவமனையில் ஒரு குடும்பமானது அவர்களின் சொந்தப் பணத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட சராசரி மருத்துவச் செலவு 4,129 ரூபாய் மற்றும் 5,290 ரூபாய் ஆக மதிப்பிடப்பட்டுள்ளது.
  • கடைசி 30 நாட்களில் மருத்துவமனை சாராதச் சிகிச்சைகளுக்காக ஒரு குடும்பத்தின் சராசரி மருத்துவச் செலவினமானது கிராமப்புறங்களில் 539 ரூபாயாகவும், நகர்ப் புறங்களில் 606 ரூபாயாகவும் இருந்தது.
  • 15 முதல் 24 வயதிற்குட்பட்டவர்களில் சுமார் 96.9% பேர் எளிய கூற்றுக்களைப் படிக்கவும் மற்றும் எழுதவும் முடிந்தவர்களாகவும் எளிய எண்கணித கணக்கீடுகளைச் செய்யக் கூடியவர்களாகவும் உள்ளனர்.
  • அதே வயதினரில், இந்த எண்ணிக்கையானது ஆண்களில் 97.8% ஆகவும், பெண்களில் 95.9% ஆகவும் இருந்தது.
  • 15 முதல் 24 வயதிற்குட்பட்டவர்களில் சுமார் 23.3% பேர் கல்வி, வேலைவாய்ப்பு அல்லது பயிற்சியினைப் பெறவில்லை.
  • 95.1% வீடுகளில் தொலைபேசி அல்லது கைபேசி இணைப்பு இருந்தது என்பதோடு 9.9% வீடுகளில் கணினிகள் இருந்தன.
  • கிராமப்புறங்களில் 15 முதல் 24 வயதிற்குட்பட்டவர்களில், 95.7% பேர் கைபேசிகளைப் பயன்படுத்துகின்றனர் என்ற நிலையில் இது நகர்ப்புறங்களில் 97% ஆக இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்