முன்னணி உலக நகரங்கள் குறியீடு என்பது உலகளவில் 46 நகரங்களில் உள்ள முதன்மை ரகக் குடியிருப்பு விலைகளின் ஏற்ற இறக்கங்களைக் கண்காணிக்கும் ஒரு மதிப்பீட்டு அடிப்படையிலான குறியீடு ஆகும்.
இந்த அறிக்கையினை நைட் பிராங்க் இந்தியா எனப்படுகின்ற மனை விற்பனை ஆலோசனை வழங்கீட்டு நிறுவனமானது வெளியிட்டுள்ளது.
'2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்கான முன்னணி உலக நகரங்கள் குறியீடு' என்ற தலைப்பில் இந்த அறிக்கையானது வெளியிடப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 38வது இடத்தில் இருந்த மும்பை அதன் நிலையிலிருந்து முன்னேறியுள்ளது.
பெங்களூரு மற்றும் புது டெல்லி ஆகிய நகரங்களும் இந்தக் குறியீட்டுத் தரவரிசையில் முன்னேறியுள்ளன.