சிகாகோ பல்கலைக்கழகத்தின் எரிசக்தி கொள்கை நிறுவனம் ஆனது வருடாந்திரக் காற்று தர வாழ்நாள் இழப்புக் குறியீட்டு (AQLI) அறிக்கையை வெளியிட்டுள்ளது.
தற்போதைய காற்று மாசுபாட்டின் நிலையானது உலக மனித ஆரோக்கியத்திற்கு குறிப்பிடத் தக்க அச்சுறுத்தலாக உள்ளது என்று இந்த அறிக்கை கூறுகிறது.
நுண்ணியத் துகள் மாசுபாடு (PM2.5) குறித்த உலக சுகாதார அமைப்பின் வழி காட்டுதல்களை ஏற்பது உலகளவில் மக்களின் ஆயுட்காலத்தினை 2.3 ஆண்டுகள் வரை நீட்டிப்பதற்கு உதவும் என்பதை அறிக்கை எடுத்துரைக்கிறது.
இது மொத்தமாக 17.8 பில்லியன் ஆண்டுகள் ஆயுட்காலத்தினைப் பாதுகாக்க வழி வகுக்கும்.
வங்காளதேசம், இந்தியா, பாகிஸ்தான், சீனா, நைஜீரியா மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் தான் மக்களின் ஆயுட்காலம் மீது காற்றுத் தரத்தினால் ஏற்படும் அதிகளவிலான தாக்கம் பதிவாகியுள்ளது.
இந்த 6 நாடுகளும் ஆயுட்காலம் மீதான காற்று மாசுபாட்டின் தாக்கம் அதிகம் காணப் படும் மையப்பகுதிகளாகும்.
இந்த நாடுகளில், குடிமக்கள் மாசுபட்ட காற்றினைச் சுவாசிப்பதன் காரணமாக ஒன்று முதல் ஆறு வருடங்கள் வரையிலான வாழ்நாள் இழப்பு பதிவாகியுள்ளது.