நடப்பு நீர் அளவீட்டு ஆண்டு 2023-24 ஆனது இம்மாதத்துடன் முடிவடையும் நிலையில், இந்த ஆண்டில் மாநில அரசினால் திறக்கப்பட உள்ள ஒட்டுமொத்த நீரின் அளவானது 1974 ஆம் ஆண்டிலிருந்து 2016-17 ஆம் ஆண்டின் போது வெளியிடப்பட்ட 69 ஆயிரம் மில்லியன் கன அடி என்ற மிகக் குறைந்த அளவிற்கு சிறிது அதிகமாக இருக்கும்.
ஏப்ரல் 30 ஆம் தேதியன்றான நிலவரப்படி, 2023 ஆம் ஆண்டு ஜூன் 01 ஆம் தேதி முதல் மொத்த நீர் வரத்து சுமார் 78.8 ஆயிரம் மில்லியன் கன அடியாகும்.
இது 2003-04 ஆம் ஆண்டில் பதிவான 75.6 ஆயிரம் மில்லியன் கன அடியை விட சற்று அதிகமாக இருந்தது.
அனைத்து சாத்தியக் கூறுகளிலும், நடப்பு நீர் அளவீட்டு ஆண்டு ஆனது, தமிழக மாநிலத்திற்கு 100 ஆயிரம் மில்லியன் கன அடிக்கு மிகாமல் காவிரி நீர் வழங்கப்பட்ட மூன்றாவது சந்தர்ப்பத்தைக் குறிக்கும்.
2000 ஆம் ஆண்டிலிருந்து, மேலும் இரண்டு ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கான வருடாந்திரப் பங்கு 100 ஆயிரம் மில்லியன் கன அடியை மிகவும் சிறு வித்தியாசத்தில் தாண்டியது.
2012-13 ஆம் ஆண்டில் 100.4 ஆயிரம் மில்லியன் கன அடியாகவும், 2002-03 ஆம் ஆண்டில் 109.9 ஆயிரம் மில்லியன் கன அடியாகவும் வழங்கப்பட்டது.
காவிரி நீர்ப் பங்கீடு தொடர்பான கர்நாடகாவின் வாதத்தின் படி, 1924 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் 50 ஆண்டு காலம் 1974 ஆம் ஆண்டில் முடிவடைந்தது.
1924 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு 75% உபரி நீரும், கர்நாடகாவுக்கு 23% நீரும் கிடைக்கப்பெறும்.