TNPSC Thervupettagam

வருடாந்திரத் தொழிலாளர் வளக் கணக்கெடுப்பு

June 17 , 2022 892 days 521 0
  • 2020-21 ஆம் ஆண்டிற்கான வருடாந்திரத் தொழிலாளர் வளக் கணக்கெடுப்பு ஆனது புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சகத்தினால் வெளியிடப்பட்டது.
  • 2019-20 ஆம் ஆண்டில் 4.8% என்று இருந்த வேலைவாய்ப்பின்மை விகிதமானது 0.6% குறைந்து 2020-21 ஆம் ஆண்டில் 4.2% ஆகக் குறைந்துள்ளது.
  • கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 3% ஆகவும், நகர்ப்புறங்களில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 6.7% ஆகவும் பதிவாகியுள்ளது.
  • தேசியப் புள்ளியியல் அலுவலகம் ஆனது (NSO) நகர்ப்புறங்களில் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் (LFPR), தொழிலாளர் எண்ணிக்கை விகிதம் (WPR) மற்றும் வேலை வாய்ப்பின்மை விகிதம் ஆகியவற்றை மதிப்பிடுவதற்கு நகர்ப்புறங்களில் "சுழற்சிக் குழு மாதிரி வடிவமைப்பை" பயன்படுத்துகிறது.
  • மேலும், நகர்ப்புறங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில வீடுகளுக்கு நான்கு முறை என்ற அளவிலானக் கணக்கெடுப்பிற்கு வருகை தருகிறது.
  • நகர்ப்புறங்களில் தொழிலாளர் பங்கேற்பு விகிதமானது, மொத்த மக்கள் தொகையில் தொழிலாளர் வளத்தில் உள்ள நபர்களின் சதவீதம் (அதாவது வேலை செய்யும் அல்லது வேலை தேடும் அல்லது வேலை செய்யக் கூடிய தரத்தில் உள்ள)  2020-21 ஆம் ஆண்டில் 6% ஆக இருந்தது.
  • அதற்கு முந்தைய ஆண்டில் இது 40.1% ஆக இருந்தது.
  • தொழிலாளர் எண்ணிக்கை விகிதமானது முந்தைய ஆண்டின் அளவான 38.2% என்ற அளவினை விட அதிகமாக 39.8% என்ற அளவாக இருந்தது.
  • இதன் படி இடம்பெயர்வு விகிதம் ஆனது 28.9% ஆக இருந்தது.
  • பெண்களின் இடம்பெயர்வு விகிதம் கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் முறையே 48% மற்றும் 47.8%  என்ற விகிதமாக இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்