TNPSC Thervupettagam

வருடாந்திரத் தொழிலாளர் வளக் கணக்கெடுப்பு 2023

June 3 , 2023 416 days 237 0
  • தேசியப் புள்ளியியல் அலுவலகமானது (NSO) வருடாந்திர தொழிலாளர் வளக் கணக்கெடுப்பின் தரவை வெளியிட்டது.
  • 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட ஆண்களுக்கும் பெண்களுக்குமான வேலை வாய்ப்பின்மை விகிதம் ஆனது 2023 ஆம் நிதியாண்டின் நான்காம் காலாண்டில் 6.8% ஆகக் குறைந்துள்ளது.
  • கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இது 8.2 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தது.
  • 2020 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் வேலைவாய்ப்பின்மை விகிதமானது 20.8% ஆக இருந்தது.
  • ஆண்களின் வேலைவாய்ப்பின்மையில் ஏற்பட்டக் குறைவானது பெண்களின் வேலை வாய்ப்பின்மையை விட அதிகமாக இருந்தது.
  • மூன்றாம் காலாண்டில் 22.3% ஆக இருந்த பெண் தொழிலாளர் பங்கேற்பு வீதமானது நான்காம் காலாண்டில் 22.7% ஆக மேம்பட்டது.
  • வேலைவாய்ப்பின்மை விகிதம் ஆனது 9% சதவீதத்திற்கும் அதிகமாகவே இருந்தது.
  • பெரிய மாநிலங்களில் சத்தீஸ்கர் 31.5% என்ற அதிகப் பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதத்தினைக் கொண்டுள்ளது.
  • அதைத் தொடர்ந்து ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு முறையே 30.5% மற்றும் 27.4% சதவீதத்தினைக் கொண்டுள்ளன.
  • உத்தரப் பிரதேச மாநிலமானது 13.3% பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதத்துடன் மோசமான செயல்திறனைக் கொண்டுள்ளது.
  • ஒட்டு மொத்தமாக, முந்தைய காலாண்டில் 10.6% ஆக இருந்த சத்தீஸ்கர் மாநிலத்தின் வேலைவாய்ப்பின்மை விகிதமானது 12.5% ஆக உயர்ந்துள்ளது.
  • அதைத் தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலத்தில் இது 11.9% ஆக உள்ளது.
  • இது டெல்லியில் 3.1% ஆகவும், மேற்கு வங்காளத்தில் 4.2% ஆகவும் மற்றும் கர்நாடகா மாநிலத்தில் 5.1% ஆகவும் இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்