TNPSC Thervupettagam

வருடாந்திரத் தொழிலாளர் வளக் கணக்கெடுப்பு 2025

February 22 , 2025 10 hrs 0 min 18 0
  • 2023 ஆம் ஆண்டு அக்டோபர் – டிசம்பர் வரையிலான காலாண்டில், நகர்ப்புறங்களில் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களிடையே சுமார் 49.9% ஆக இருந்த தொழிலாளர் வளப் பங்கேற்பு விகிதம் (LFPR) ஆனது 2024 ஆம் ஆண்டு அக்டோபர் – டிசம்பர் மாதம் வரையிலான காலாண்டில் 50.4% ஆக அதிகரித்துள்ளது.
  • நகர்ப்புறங்களில் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட ஆண்களுக்கான LFPR விகிதம் அதே காலக் கட்டத்தில் 74.1 சதவீதத்திலிருந்து 75.4% ஆக அதிகரித்துள்ளது.
  • நகர்ப்புறங்களில் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெண்களுக்கான LFPR ஆனது 25.0 சதவீதத்திலிருந்து 25.2% ஆக அதிகரித்துள்ளது.
  • நகர்ப்புறங்களில் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களிடையே நிலவும் வேலை வாய்ப்பின்மை விகிதம் (UR) 6.5 சதவீதத்திலிருந்து 6.4% ஆகக் குறைந்துள்ளது.
  • 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட ஆண்களிடையே நிலவும் வேலைவாய்ப்பின்மை விகிதம் ஆனது 5.8% ஆகவே உள்ளது.
  • 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டப் பெண்களிடையே நிலவும் வேலைவாய்ப்பின்மை விகிதம் ஆனது 8.6 சதவீதத்திலிருந்து 8.1% ஆகக் குறைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்