வருணாஸ்திரா என்ற ஏவுகணையானது விசாகப் பட்டினத்தில் அமைந்துள்ள அதன் உற்பத்தி நிறுவனமான பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தினால் இந்தியக் கடற்படையிடம் வழங்கப் பட்டுள்ளது.
வருணாஸ்திரா என்பது இந்தியாவின் முதலாவது கனரக நீர்மூழ்கி ஏவுகணை ஆகும்.
இது வெடிக்கும் ஆயுதங்களுடன் கூடிய ஒரு நீர்மூழ்கி ஏவுகணை வகையாகும்.
இந்தியாவின் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு, தயாரிக்கப்பட்ட முதலாவது நீர்மூழ்கி ஏவுகணை இதுவாகும்.
இது இந்தியாவின் ஒரு மேம்படுத்தப்பட்ட கனரக நீர்மூழ்கி எதிர்ப்பு ஏவுகணை ஆகும்.
நீர்மூழ்கி எதிர்ப்பு ஏவுகணையான இது மின்சாரத்தால் இயக்கப் படுகின்றது.
மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகம் வரை பயணிக்கும் திறன் கொண்ட இந்த ஏவுகணையானது 40 கிலோ மீட்டர் தூர வரம்பைக் கொண்டுள்ளது.
இது 250 கிலோ கிராம் எடையுள்ள ஆயுதங்களை எடுத்துச் செல்லும் திறன் கொண்டது.
இது விசாகப் பட்டினத்தில் அமைந்துள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் கடல்சார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வகத்தினால் உருவாக்கப் பட்டுள்ளது.
இந்தியப் பாதுகாப்புத் தொழிற்துறையின்படி, புவியிடங்காட்டி அடிப்படையிலான உதவி செய்தலைக் கொண்ட உலகின் ஒரே நீர்மூழ்கி ஏவுகணை இதுவாகும்.