TNPSC Thervupettagam

வருமான வரி கணக்குத் தாக்கலில் புதிய சாதனை

August 5 , 2023 477 days 296 0
  • 2023-24 ஆம் ஆண்டு ஜூலை 31 ஆம் தேதி வரையில் 6.77 கோடிக்கு மேலாக வருமான வரிக் கணக்கு (ITR) தாக்கல் செய்யப்பட்டதுடன் புதிய சாதனை அளவாகப் பதிவாகி உள்ளது.
  • காலக்கெடுவிற்கு முன் தாக்கல் செய்யப்பட்ட வருமான வரிக் கணக்குத் தாக்கலானது 2022-23 ஆம் ஆண்டில் பதிவான மொத்த வருமான வரிக் கணக்கு (ITR) தாக்கலை விட 16.1 சதவீதம் அதிகமாகும்.
  • 64.33 லட்சத்துக்கும் அதிகமான வருமான வரிக் கணக்குத் தாக்கல்களுடன் கடைசி நாளில் (ஜூலை 31) அதன் அளவு உச்சத்தை எட்டியது.
  • வருமான வரித் துறை முதல் முறையாக வரித் தாக்கல் செய்தவர்களிடமிருந்தும் 53.67 லட்சம் வருமான வரிக் கணக்குத் தாக்கலைப் பெற்றுள்ளது.
  • மாலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை, ஒரு மணி நேரத்திற்கு அதிகபட்ச வீதமாக 4,96,559 வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
  • 16:35:06 மணிக்கு, ஒரு வினாடிக்கு அதிகபட்ச வீதமாக 486 வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
  • ஜூலை 31 ஆம் தேதியன்று 17:54 மணிக்கு ஒரு நிமிடத்திற்கு அதிகபட்ச வீதமாக 8,622 வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்யப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்