2023-24 ஆம் ஆண்டு ஜூலை 31 ஆம் தேதி வரையில் 6.77 கோடிக்கு மேலாக வருமான வரிக் கணக்கு (ITR) தாக்கல் செய்யப்பட்டதுடன் புதிய சாதனை அளவாகப் பதிவாகி உள்ளது.
காலக்கெடுவிற்கு முன் தாக்கல் செய்யப்பட்ட வருமான வரிக் கணக்குத் தாக்கலானது 2022-23 ஆம் ஆண்டில் பதிவான மொத்த வருமான வரிக் கணக்கு (ITR) தாக்கலை விட 16.1 சதவீதம் அதிகமாகும்.
64.33 லட்சத்துக்கும் அதிகமான வருமான வரிக் கணக்குத் தாக்கல்களுடன் கடைசி நாளில் (ஜூலை 31) அதன் அளவு உச்சத்தை எட்டியது.
வருமான வரித் துறை முதல் முறையாக வரித் தாக்கல் செய்தவர்களிடமிருந்தும் 53.67 லட்சம் வருமான வரிக் கணக்குத் தாக்கலைப் பெற்றுள்ளது.
மாலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை, ஒரு மணி நேரத்திற்கு அதிகபட்ச வீதமாக 4,96,559 வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
16:35:06 மணிக்கு, ஒரு வினாடிக்கு அதிகபட்ச வீதமாக 486 வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
ஜூலை 31 ஆம் தேதியன்று 17:54 மணிக்கு ஒரு நிமிடத்திற்கு அதிகபட்ச வீதமாக 8,622 வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்யப் பட்டது.