TNPSC Thervupettagam

வருமான வரி தினம் - ஜூலை 24

July 27 , 2022 761 days 261 0
  • 1860 ஆம் ஆண்டில் இதே நாளில், இந்தியாவில் வருமான வரி முதன்முதலில் வரியாக விதிக்கப் பட்டதை நினைவு கூறும் வகையில் இந்த தேதியானது தேர்ந்தெடுக்கப் பட்டது.
  • 2010 ஆம் ஆண்டில், இந்த வரி விதிக்கப்பட்டதன் 150 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில், முதல் முறையாக இந்தத் தினத்தினைக் கொண்டாடுவதற்கு வருமான வரித் துறை முடிவு செய்தது.
  • இந்த ஆண்டு 162வது தேசிய வருமான வரி தினமாகும்
  • இந்தியாவில் வருமான வரியானது, 1860 ஆம் ஆண்டில் சர் ஜேம்ஸ் வில்சன் என்பவரால் முதல் முறையாக விதிக்கப்பட்டது.
  • 1922 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட வருமான வரிச் சட்டமானது, நேரடி வரி நிர்வாகத்திற்கான சரியான கட்டமைப்பை வகுத்தது
  • 1924 ஆம் ஆண்டில், வருமான வரிச் சட்டத்தை நிர்வகிப்பதற்கான செயல்பாட்டுப் பொறுப்புகளைக் கொண்ட ஒரு சட்டப்பூர்வ அமைப்பாக மத்திய வருவாய் வாரியம் உருவாக்கப்பட்டது.
  • 1963 ஆம் ஆண்டில், மத்திய வருவாய் வாரியம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) எனப்படும் நேரடி வரிகளுக்கான தனி வாரியம் ஆனது, 1963 ஆம் ஆண்டு மத்திய வருவாய் வாரியச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்