2019 ஆம் ஆண்டு ஜூலை 24 அன்று மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT - Central Board of Direct Taxes) 159-வது வருமான வரி தினத்தை அனுசரித்தது.
1860 ஆம் ஆண்டு ஜூலை 24 ஆம் தேதி சர் ஜேம்ஸ் வில்சனால் இந்தியாவில் முதன்முறையாக வருமான வரி அறிமுகப்படுத்தப்பட்டது.
இது ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக 1857 ஆம் ஆண்டில் நடைபெற்ற முதல் இந்தியச் சுதந்திரப் போரின் போது பிரிட்டிஷ் ஆட்சிக்கு ஏற்படுத்தப்பட்ட இழப்புகளை ஈடு செய்ய அறிமுகப்படுத்தப் பட்டது.