TNPSC Thervupettagam

வருமான வரி தினம் – ஜூலை 24

July 25 , 2023 395 days 185 0
  • இந்தியாவில் இந்த வரி விதிப்பு தொடங்கப்பட்டதன் 164 ஆண்டு நிறைவினை நினைவு கூரும் வகையில் இந்த ஆண்டு வருமான வரி தினம் அல்லது ஆய்கார் திவாஸ் தினம் கொண்டாடப் படுகிறது.
  • சர் ஜேம்ஸ் வில்சன் 1860 ஆம் ஆண்டு ஜூலை 24 ஆம் தேதியன்று இந்தியாவில் வருமான வரியை அமல்படுத்தினார்.
  • 1857 ஆம் ஆண்டு கிளர்ச்சியின் போது ஆங்கிலேய ஆட்சிக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு ஈடு செய்வதற்காக இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • 1922 ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டமானது பல வருமான வரி விதிப்புகளுக்கு ஒரு தனித்துவமானப் பெயரிடலை அறிமுகப் படுத்தியது.
  • 2010 ஆம் ஆண்டில், நிதித் துறை அமைச்சகமானது ஜூலை 24 ஆம் தேதியை வருமான வரி தினமாக அறிவித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்