TNPSC Thervupettagam

வருமுன் காப்போம்

October 13 , 2021 1144 days 7386 0
  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வாழப்பாடியில் நடந்த விழாவில் ‘வருமுன் காப்போம்’ என்ற திட்டத்தை ‘கலைஞரின் வருமுன் காப்போம்’ என்ற பெயரில் மீண்டும் தொடங்கி வைத்தார்.
  • ஒரு வருடத்தில், இத்திட்டத்தின் கீழ் 1,250 மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்றார்.
  • வருமுன் காப்போம் திட்டத்தை முதன்முதலில் முன்னாள் முதல்வர் எம் கருணாநிதி அவர்கள் 2006 ஆம் ஆண்டில் தொடங்கி வைத்தார்.
  • இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம், மக்களிடையே நோய்களைத் தடுப்பது மற்றும் அவர்களின் ஆரோக்கியத்தை உறுதி செய்வது என்பதாகும்.
  • இந்த முகாம்கள் பல், காதுகள், மூக்கு மற்றும் தொண்டை சார்ந்தது, வயிறு, குடல், உயர் இரத்த அழுத்தம், டிப்தீரியா, எலும்பு மற்றும் மூட்டு, சிறுநீரகம், இதயம் மற்றும் மனநலம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும்.
  • புதிதாக அடையாளம் காணப்பட்ட நோயாளிகள் தங்கள் வீட்டில் இருந்தபடியே மருந்துகளைப் பெற உதவும் வகையில் 'மக்களைத் தேடி மருத்துவம்' (மக்களின் வீடுகளுக்கு மருந்துகளை எடுத்துச் செல்லும்) திட்டத்துடன் இத்திட்டம் இணைக்கப் படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்