TNPSC Thervupettagam

வரும் பத்தாண்டுகளில் வேகமாக வளரும் பொருளாதார நாடுகள்

May 10 , 2018 2392 days 839 0
  • ஹார்வார்டு பல்கலைக்கழகத்தின் சமீபத்திய அறிக்கையின் படி வரும் பத்தாண்டுகளில் வேகமாக வளரும் பொருளாதார நாடுகள் பட்டியலில் உலகளவில் இந்தியா முதலிடத்தைப் பிடித்திருப்பதோடு, சீனா மற்றும் அமெரிக்க ஆகிய நாடுகளைவிட ஆண்டுக்கு9% வளர்ச்சியைக் கொண்டு முன்னணியில் இருக்கிறது.
  • 2026 ஆம் ஆண்டை நோக்கிய நிலையில், சீனா ஆண்டுக்கு9% என்ற அளவிலும், அமெரிக்கா ஆண்டுக்கு 3% என்ற அளவிலும் பொருளாதார வளர்ச்சியை கொண்டிருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. பிரான்ஸ் ஆண்டுக்கு 3.5% என்ற அளவில் வளர்ச்சியைக் கொண்டிருக்கும்.
  • சிக்கலான புதிய பொருட்களை பொருளாதாரத்தில் கொண்டு வருவதற்கு தற்போதுள்ள அறிவை (Existing Knowledge) மீண்டும் புகுத்துதல் என்பது எந்த அளவிற்கு எளிமையானது என்பதை அளவிடும் சிக்கலான வாய்ப்புக் குறியீட்டில் (Complexity Opportunity Index - COI) இந்தியா சிறப்பான இடத்தைப் பிடித்திருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
  • 2026-ஐ நோக்கிய நிலையில் வேகமாக வளரும் பொருளாதார நாடுகள் பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கும் உகாண்டா ஆண்டுக்கு5% என்ற அளவில் பொருளாதார வளர்ச்சியைக் கொண்டிருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
  • சகாராவிற்குக் கீழான ஆப்பிரிக்க நாடுகளில் பொருளாதார வளர்ச்சியானது பொருட்களை (Commodity) ஏற்றுமதி செய்யும் மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து கிழக்கு ஆப்பிரிக்காவை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. உகாண்டா (4-வது இடம்), தான்சானியா (4-வது இடம்) மற்றும் கென்யா (10-வது இடம்) ஆகிய நாடுகள் வரும் பத்தாண்டுகளில் உலகளவில் வேகமாக வளரும் நாடுகள் என கணிக்கப்பட்ட பொருளாதார நாடுகளில் முதல் பத்து இடங்களில் உள்ளன.
  • வங்கதேசம், வெனிசுலா மற்றும் அங்கோலா போன்ற குறைந்த வருமானமுள்ள நாடுகள் அவைகளுடைய பொருளாதாரத்தைப் பெருக்கும் திறன்களை பரவலாக்கம் செய்யத் தவறிவிட்டதாகவும், வரும் பத்தாண்டுகளில் இவை குறைந்த வளர்ச்சி வாய்ப்புகளை சந்திக்க இருப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்