இயற்கைப் பேரிடர்கள் அல்லது இயற்கைப் பேரழிவுகள் ஏற்படும் சூழலில் வருவாய் திரட்டலுக்கான பரிந்துரைகளைப் பரிந்துரைப்பதற்காக சரக்கு மற்றும் சேவை வரி சபையானது ஓர் அமைச்சர்கள் குழுவை (GoM) அமைத்துள்ளது.
சரக்கு மற்றும் சேவை வரியிலிருந்து வரும் வருவாயைப் பகுப்பாய்வு செய்வதற்காக இது மற்றொரு குழுவை அமைத்துள்ளது.
இந்தக் குழுவிற்கு உத்தரப் பிரதேச மாநில நிதியமைச்சர் சுரேஷ் கன்னா தலைமை தாங்குகிறார்.
அசாம், சத்தீஸ்கர், குஜராத், கேரளா, உத்தரகாண்ட் மற்றும் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த நிதியமைச்சர்கள் மற்ற உறுப்பினர்கள் ஆவர்.
பேரிடர் கால வீத வரி மற்றும் அது நிர்ணயிக்கப்படுவதற்கான ஒரு கால அளவினை இந்தக் குழு பரிந்துரைக்கும்.
சரக்கு மற்றும் சேவை வரியானது, பேரிடர் காலங்களில் சிறப்பு வரிகளை விதிக்க அனுமதிக்கிறது.
2018 ஆம் ஆண்டில் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்திற்குப் பிறகு கேரளாவின் நிதித் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக இதே போன்ற ஒரு குழு உருவாக்கப்பட்டது.
2019 ஆம் ஆண்டில் புனரமைப்பு முயற்சிகளுக்கு நிதியளிப்பதற்காக வேண்டி இரண்டு ஆண்டுகளுக்கு 1 சதவீதப் பேரிடர் வீத வரியினை விதிக்க கேரள மாநில அரசிற்கு அனுமதி வழங்கப்பட்டது.