நிதி அமைச்சகத்தின் செலவினங்கள் துறையானது 14 மாநிலங்களுக்கு வருவாய்ப் பற்றாக்குறை மானியமாக ரூ.7,183.42 கோடியை வழங்கியது.
இது மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்ட வருவாய்ப் பற்றாக்குறை மானியத்தின் 2வது மாதத் தவணையாகும்.
மதிப்பிடப்பட்ட நிதிப் பகிர்வைக் கருத்தில் கொண்டு ஒரு மாநிலத்தின் வருவாய் மதிப்பீட்டிற்கும் செலவினங்களின் மதிப்பீட்டிற்கும் இடையே உள்ள இடைவெளியின் அடிப்படையில் மாநிலங்கள் எவ்வளவு நிதியினைப் பெற வேண்டும் என்ற ஒரு தகுதியைப் பதினைந்தாவது நிதிக்குழு ஆணையம் நிர்ணயம் செய்தது.
இந்திய அரசியலமைப்பின் 275வது விதியிவின் படி, மாநிலங்களுக்குப் பகிர்ந்து அளிக்கப் பட்ட வருவாய்ப் பற்றாக்குறை மானியம் வழங்கப்படுகிறது.