ரஷ்யாவிற்கு வரையறுக்கப்பட்ட (தடை செய்யப்பட்ட) முக்கிய தொழில்நுட்பங்களை வழங்கும் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா முன்னேறியுள்ளது.
நுண் சில்லுகள், மின் சுற்றுகள் மற்றும் இயந்திர கருவிகள் போன்ற முக்கியமான பொருட்களின் இந்திய ஏற்றுமதியானது ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 60 மில்லியன் டாலரைத் தாண்டி ஜூலை மாதத்தில் 95 மில்லியன் டாலராக உயர்ந்தது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியங்களின் இதயன் மீதான கட்டுப்பாட்டு கொள்கைகளால், அத்தகையப் பொருட்களை ஏற்றுமதி செய்வதிலான இந்தியாவின் பங்கு மேலும் சவாலை ஏற்படுத்தியுள்ளது.