TNPSC Thervupettagam

வரைவு காப்புரிமைகள் (திருத்தம்), விதிகள், 2023

September 29 , 2023 297 days 219 0
  • இந்திய அரசானது 1970 ஆம் ஆண்டு காப்புரிமைச் சட்டத்தின் கீழான வரைவு காப்பு உரிமை (திருத்தம்) விதிகளை வெளியிட்டுள்ளது.
  • இதன் கீழ், புதிய மற்றும் பயனுள்ள கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமைகள் வழங்கப் படுவதோடு மேலும், கண்டுபிடிப்பாளர்களுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பு மற்றும் அவர்களின் கண்டுபிடிப்புகளுக்கான பிரத்தியேக உரிமைகளை வழங்குவதன் மூலம் புதுமைகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடனும் இந்த விதிகள் அறிமுகப் படுத்தப் பட்டு உள்ளது.
  • முன்-அனுமதி எதிர்ப்பு (PGO – Pre Grant Opposition) தாக்கல் செய்வதற்கு (முன்பு இலவசம்) ஒரு மாறுநிலைக் கட்டணம் விதிக்கப்படும்.
  • PGO என்பது காப்புரிமை வெளியீட்டிற்குப் பிறகு, ஆனால் அதற்கு அனுமதி வழங்கப் படுவதற்கு முன் தாக்கல் செய்யப்படும் ஒரு முன் அனுமதி எதிர்ப்பு ஆகும்.
  • முன்பு அனைவராலும் தாக்கல் செய்யப்படக்கூடிய PGO தாக்கல் ஆனது தற்போது காப்புரிமைகள், வடிவமைப்புகள் மற்றும் வர்த்தக முத்திரைகளின் தலைமைக் கட்டுப்பாட்டகத்தின் மூலம் தீர்மானிக்கப்படும்.
  • காப்புரிமை பெற்ற பொருளின் உற்பத்தி இடம் மற்றும் விலை குறித்த தகவல்களை வெளியிட வேண்டிய அவசியமில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்