இந்திய அரசானது 1970 ஆம் ஆண்டு காப்புரிமைச் சட்டத்தின் கீழான வரைவு காப்பு உரிமை (திருத்தம்) விதிகளை வெளியிட்டுள்ளது.
இதன் கீழ், புதிய மற்றும் பயனுள்ள கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமைகள் வழங்கப் படுவதோடு மேலும், கண்டுபிடிப்பாளர்களுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பு மற்றும் அவர்களின் கண்டுபிடிப்புகளுக்கான பிரத்தியேக உரிமைகளை வழங்குவதன் மூலம் புதுமைகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடனும் இந்த விதிகள் அறிமுகப் படுத்தப் பட்டு உள்ளது.
முன்-அனுமதி எதிர்ப்பு (PGO – Pre Grant Opposition) தாக்கல் செய்வதற்கு (முன்பு இலவசம்) ஒரு மாறுநிலைக் கட்டணம் விதிக்கப்படும்.
PGO என்பது காப்புரிமை வெளியீட்டிற்குப் பிறகு, ஆனால் அதற்கு அனுமதி வழங்கப் படுவதற்கு முன் தாக்கல் செய்யப்படும் ஒரு முன் அனுமதி எதிர்ப்பு ஆகும்.
முன்பு அனைவராலும் தாக்கல் செய்யப்படக்கூடிய PGO தாக்கல் ஆனது தற்போது காப்புரிமைகள், வடிவமைப்புகள் மற்றும் வர்த்தக முத்திரைகளின் தலைமைக் கட்டுப்பாட்டகத்தின் மூலம் தீர்மானிக்கப்படும்.
காப்புரிமை பெற்ற பொருளின் உற்பத்தி இடம் மற்றும் விலை குறித்த தகவல்களை வெளியிட வேண்டிய அவசியமில்லை.