TNPSC Thervupettagam

வர்த்தகப் பிரச்சனைகளை விரைவாகத் தீர்ப்பதற்கான சட்டதிருத்தம்

August 15 , 2018 2299 days 632 0
  • மாநிலங்களவை ஆகஸ்ட் 10, 2018 அன்று வர்த்தகங்களுக்கான நீதிமன்றங்கள், உயர்நீதிமன்றத்தின் வர்த்தகங்களுக்கான பிரிவு மற்றும் வர்த்தக மேல்முறையீட்டுப் பிரிவு (திருத்த) மசோதாவை நிறைவேற்றியுள்ளது.
  • இந்த மசோதா மாநில அரசுகள்
    • உயர்நீதி மன்றங்கள் அசல் உரிமையியல் அதிகார வரம்பிற்கு உட்பட்ட பகுதிகளிலும் கூட மாவட்ட அளவில் வர்த்தகங்களுக்கான நீதிமன்றங்களை அமைக்கவும்,
    • உயர்நீதிமன்றத்தின் அசல் அதிகார வரம்பிற்கு உட்படாத பகுதிகளில் கூட மாவட்ட அளவில் வர்த்தகங்களுக்கான மேல்முறையீட்டு நீதிமன்றங்களை அமைக்கவும்

                 அனுமதியளிக்கிறது

  • இந்த திருத்தமானது வர்த்தகங்களுக்கான நீதிமன்றத்தின் பண மதிப்பு எல்லையை ரூ.1 கோடியில் இருந்து ரூ.3 லட்சமாக குறைத்துள்ளது.
  • இது குறைந்த மதிப்புள்ள வர்த்தக சிக்கல்களை தீர்ப்பதற்கான கால அளவை (தற்போது 1445 நாட்கள்) குறைக்கும் மற்றும் எளிதாக வர்த்தகம் செய்யக் கூடிய நாடுகளின் பட்டியலில் இந்தியாவின் தரவரிசையை உயர்த்தும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்