TNPSC Thervupettagam

வர்ஷாதாரி திட்டம் - மேக விதைப்பு திட்டம் - கர்நாடக அரசு

August 24 , 2017 2682 days 1250 0
  • ஆகாய விமானங்கள் இரசாயனங்களைத் தூவி மழையைத் தருவிக்க மேகங்களை தூண்டி விடும் திட்டம் ஒன்றை வர்ஷாதாரி (Project Varshadhari) என்ற பெயரில் கர்நாடக அரசு பெங்களூருவில் தொடங்கி இருக்கிறது.
  • இது பெங்களூரு, கடக் மற்றும் யாதகிரி மாவட்டங்களில் ஆரம்பிக்கப்படும் ஒரு பரிசோதனை முயற்சியாகும்.
  • இந்த மேக விதைப்பு முயற்சி 10 மைக்ரானுக்கும் குறைந்த அளவில் உள்ள சிறிய நீல்மூலக்கூறுகளை திரவமாக்கி 50 மைக்ரானுக்கான அமைப்பில் நீர்த்திவலைகளாக மாற்ற முனைகிறது.
  • 2003-ல் வருணாத் திட்டம் என்ற பெயரில் அப்போதைய நீர்வளத் துறை அமைச்சகத்தால் மேக விதைப்புத் திட்டம் துவங்கப்பட்டது. இதன் பலன்கள் விவாதத்திற்குரியது என்றாலும், இந்த முறை மேக அறிவியலாளர்களும், வானிலை மையக் கட்டுப்பாட்டுக்குழுவும் சிறந்த பலன்களை எதிர்பார்க்கின்றனர்.
மேக விதைப்பு (Cloud seeding)
  • மேக விதைப்பு என்பது தட்பவெப்பநிலையை மாற்றும் ஒரு முறை.
  • இது மேகத்திலிருந்து விழும் மழையின் வடிவத்தையும், அளவையும் மாற்றும் முறை. இது காற்றில் மேக உருவாக்கலுக்கான காரணமான பனி மூலக்கூறுகளை பிரிக்கும் ஒரு முயற்சியாகும். இதன் மூலம் மேகத்தின் உள்ளே நடக்கும் நுண்கட்டமைப்பு செயல்முறைகளில் மாற்றம் கொண்டு வர முடியும். இதன் வழக்கமான நோக்கம் மழைப்பொழிவின் அல்லது பனிப்பொழிவின் அளவை அதிகரிப்பதாகும்.
  • இத்திட்டத்தில் பெரும்பாலும் உபயோகப்படுத்தப்படும் இரசாயனங்கள் சில்வர் அயோடைட், பொட்டாசியம் அயோடைட் மற்றும் உலர் பனி எனப்படும் திடவடிவிலான கார்பன்டைஆக்ஸைடு ஆகும். வாயுவாக பிரியும் திரவ ப்ரோப்பேனும் இதற்காக பயன்படுத்தப்படுகின்றன. இவை சில்வர் அயோடைடைக் காட்டிலும் அதிக வெப்பநிலையில் பனி படிகங்களை உருவாக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்