வறட்சி நிலையை ஆய்வு செய்வதற்கான வலைதளம் மற்றும் செயலி
October 9 , 2018 2333 days 660 0
மகாராஷ்டிரா மாநிலத்தில் மழைப்பொழிவு, பயிர் நிலைமைகள் மற்றும் நிலத்தடி நீர் ஆகியவற்றின் தரவுகளை சேகரிப்பதன் மூலம் வறட்சி நிலைமையைப் பகுப்பாய்வு செய்வதற்காக கைபேசி செயலி மற்றும் வலைதளத்தை அம்மாநில அரசு தொடங்கியுள்ளது.
‘மஹா மதத்’ என்ற இணைய தளத்தை மகாராஷ்டிரா தொலை உணர்வி பயன்பாட்டு மையத்தின் (MRSAC - Maharashtra Remote Sensing Application Centre) உதவியுடன் நிவாரணம் மற்றும் மறுவாழ்வு அமைச்சகத்தால் உருவாக்கப்பட்டது.
2016 ஆம் ஆண்டில் மத்திய அரசால் வழங்கப்பட்ட இரண்டு வரைமுறைகளைக் கொண்டு இந்த பிராந்தியமானது வறட்சியால் பாதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எந்தவொரு பகுதியையும் 21 நாட்கள் கால அளவில் மழைப்பொழிவு இல்லையெனில் வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்கமுடியும்.