புது தில்லியில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் பாலைவனமாக்கலுக்கு எதிரான ஒப்பந்தத்தில் (United Nations Convention to Combat Desertification - UNCCD) உள்ள உறுப்பு நாடுகளின் 14வது மாநாட்டின் போது வறட்சிக் கருவிப் பெட்டி அதிகாரப் பூர்வமாகத் தொடங்கப்பட்டது.
நாடுகளால் தங்கள் பிராந்தியங்களில் ஏற்படும் வறட்சி அபாயங்களை முன்கூட்டியே மதிப்பிடுவதற்கு இதைப் பயன்படுத்த முடியும்.
இது வெவ்வேறு புவியியல் பகுதிகளில் வறட்சியினால் ஏற்படும் பாதிப்புகளைத் துல்லியமாக மதிப்பிடும் திறன் கொண்டது.
இந்தக் கருவிப் பெட்டியானது மண்ணின் ஈரப்பதம், மழை பற்றிய தரவு மற்றும் தற்போதைய & கடந்த கால வெப்பநிலை குறித்தத் தரவு உள்ளிட்ட 30 அளவுருக்களைப் பயன்படுத்துகின்றது.
உலக வங்கி ஆய்வின்படி, பொதுவாக வறட்சியைக் கணிப்பது கடினமான செயலாகும். இது வெள்ளத்தை விட நான்கு மடங்கு பொருளாதார இழப்புகளை ஏற்படுத்தும்.