வறண்ட நிலங்களில் உள்ள நகர்ப்புறக் காடுகள் மற்றும் நகர்ப்புறப் பசுமைப் படுத்துதல் திட்டம்
January 8 , 2023 692 days 370 0
உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) ஆனது, அதன் பசுமை நகர்ப்புறச் சோலைகள் திட்டத்திற்கான கட்டமைப்பின் கீழ் இந்த அறிக்கையினை வெளியிட்டு உள்ளது.
உலகின் மிகப்பெரிய நகரங்களில் 35% நகரங்கள் (புது டெல்லி, மெக்சிகோ நகரம் போன்றவை உட்பட) உலகின் வறண்ட நிலங்களில் தான் கட்டமைக்கப்பட்டுள்ளன.
ஒட்டு மொத்தத்தில், அவற்றில் 2 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்ற நிலையில், அவற்றுள் 90 சதவீத நபர்கள் வளர்ந்து வரும் நாடுகளில் உள்ளனர்.
நகர்ப்புறக் கொள்கைகள், பெரும்பான்மையான வறண்ட நிலங்களில் உள்ள நகரங்களுக்கான கொள்கைகளில் வன வளம் மற்றும் பசுமையாக்கம் ஆகியவற்றிற்கான உத்திகளை இன்னும் இணைக்கவில்லை.
தற்போது, உலக மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் நகரங்களில் வாழ்கின்ற நிலையில், தற்போது மற்றும் 2050 ஆம் ஆண்டிற்குள் ஏற்பட உள்ள 95 சதவீத நகர்ப்புற மேம்பாடானது உலகின் தெற்கு நாடுகளில் நிகழ உள்ளதாக எதிர் பார்க்கப் படுகிறது.
வறண்ட நிலங்கள் என்பது 0.65க்கும் குறைவான வறட்சிக் குறியீடு கொண்ட நிலங்கள் ஆகும்.
வறட்சிக் குறியீடு என்பது சராசரி வருடாந்திர மழைப்பொழிவிற்கும் சாத்தியமான நீராவிப் போக்கிற்கும் இடையிலான ஒரு விகிதமாகும்.