TNPSC Thervupettagam

வறண்ட நிலங்களில் உள்ள நகர்ப்புறக் காடுகள் மற்றும் நகர்ப்புறப் பசுமைப் படுத்துதல் திட்டம்

January 8 , 2023 560 days 313 0
  • உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) ஆனது, அதன் பசுமை நகர்ப்புறச் சோலைகள் திட்டத்திற்கான கட்டமைப்பின் கீழ் இந்த அறிக்கையினை வெளியிட்டு உள்ளது.
  • உலகின் மிகப்பெரிய நகரங்களில் 35% நகரங்கள் (புது டெல்லி, மெக்சிகோ நகரம் போன்றவை உட்பட) உலகின் வறண்ட நிலங்களில் தான் கட்டமைக்கப்பட்டுள்ளன.
  • ஒட்டு மொத்தத்தில், அவற்றில் 2 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்ற நிலையில்,  அவற்றுள் 90 சதவீத நபர்கள் வளர்ந்து வரும் நாடுகளில் உள்ளனர்.
  • நகர்ப்புறக் கொள்கைகள், பெரும்பான்மையான வறண்ட நிலங்களில் உள்ள நகரங்களுக்கான கொள்கைகளில் வன வளம் மற்றும் பசுமையாக்கம் ஆகியவற்றிற்கான உத்திகளை இன்னும் இணைக்கவில்லை.
  • தற்போது, உலக மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் நகரங்களில் வாழ்கின்ற நிலையில், தற்போது மற்றும் 2050 ஆம் ஆண்டிற்குள் ஏற்பட உள்ள 95 சதவீத நகர்ப்புற மேம்பாடானது உலகின் தெற்கு நாடுகளில் நிகழ உள்ளதாக எதிர் பார்க்கப் படுகிறது.
  • வறண்ட நிலங்கள் என்பது 0.65க்கும் குறைவான வறட்சிக் குறியீடு கொண்ட நிலங்கள் ஆகும்.
  • வறட்சிக் குறியீடு என்பது சராசரி வருடாந்திர மழைப்பொழிவிற்கும் சாத்தியமான நீராவிப் போக்கிற்கும் இடையிலான ஒரு விகிதமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்