இந்தியாவின் ஈரப்பதம் மிக்க பகுதிகளில் வடகிழக்கு இந்தியாவும் ஒன்றாகும்.
ஆனால் இது கடந்த 30 ஆண்டுகளாக மிக வேகமாக வறண்டு கொண்டிருக்கின்றது.
புனேவில் உள்ள இந்திய வெப்பமண்டல வானிலையியல் நிறுவனம் மற்றும் அஸ்ஸாம் பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இதற்கான காரணத்தை ஆய்வு செய்தனர்.
குறைந்த பருவ மழைப் பொழிவானது துணை வெப்பமண்டலப் பசிபிக் கடலின் இயற்கை மாற்றங்களுடன் தொடர்புடையது என்று அவர்கள் கூறியுள்ளனர்.
பத்தாண்டுகால பசிபிக் அலைவுகள்
பத்தாண்டு கால பசிபிக் அலைவுகள் (PDO - Pacific decadal oscillation) என்பது குறிப்பாக வட பசிபிக் கடலில் நிகழும் அலைவுகளின் அமைப்பாகும்.
இது வடகிழக்கு இந்தியாவின் கோடைக்கால பருவமழைப் பொழிவைப் பாதிக்கின்றது.
PDO என்பது எல்நினோ, லா நினோவைப் போன்ற ஒரு கடல் நிகழ்வாகும்.
ஆனால் இதன் தாக்கமானது பத்தாண்டு காலத்திற்கு நீடிக்கின்றது.