ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 17-ம் நாள் வறுமை ஒழிப்பிற்கான சர்வதேச தினமாக அனுசரிக்கப்படுகிறது.
இந்த ஆண்டுடன் ஐ.நா. பொதுச் சபையானது அக்டோபர் 17-ஐ வறுமை ஒழிப்பிற்கான சர்வதேச தினமாக அறிவித்து 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
இந்த ஆண்டின் கருத்துரு : மனித உரிமைகள் மற்றும் கௌரவத்திற்கான உலகளாவிய மதிப்பை உள்ளடக்கிய உலகத்தை கட்டமைக்க பின்தங்கிய மனிதர்களுடன் இணைந்து முன்னேறுதல்.
மேலும், மனித உரிமைகள் பற்றிய உலகளாவியப் பிரகடன அறிவிப்பின் 70ஆம் ஆண்டு நிறைவாக இந்த ஆண்டு அமைவது குறிப்பிடத்தக்கது.