TNPSC Thervupettagam

வறுமை ஒழிப்பிற்கான சர்வதேச தினம் – அக்டோபர் 17

October 18 , 2019 1867 days 495 0
  • வறுமை ஒழிப்பிற்கான சர்வதேச தினமானது ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 17 அன்று அனுசரிக்கப்படுகின்றது.
  • 1992 ஆம் ஆண்டில், பாதிரியார் ஜோசப் ரெசின்ஸ்கியின் நினைவாக ஐக்கிய நாடுகள் சபையானது அக்டோபர் 17 ஆம் தேதியை வறுமை ஒழிப்பு தினமாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
  • இவர் 1987 ஆம் ஆண்டில் முதன்முதலில் இந்த நாளைத் தொடங்கி, தனது வாழ்நாள் முழுவதும் வறுமை மற்றும் சமூக விலக்கிற்கு எதிராகப் போராடினார்.
  • உலகளாவிய கடுமையான வறுமை விகிதங்கள்  1990 ஆம் ஆண்டில் 36 சதவீதத்திலிருந்து 2018 ஆம் ஆண்டில் 8.6 சதவீதமாகக் குறைந்துள்ளது.
  • 2019 ஆம் ஆண்டிற்கான கருப் பொருள், “வறுமையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு குழந்தைகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் சமூகங்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காக ஒன்றிணைந்து செயல்படுவது” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்