TNPSC Thervupettagam

வறுமை மற்றும் பகிரப்பட்ட அபிவிருத்தி அறிக்கை 2020

October 13 , 2020 1376 days 672 0
  • வறுமை மற்றும் பகிரப்பட்ட அபிவிருத்தி அறிக்கை 2020 : செல்வ வளத்தின் தலைகீழ்” Poverty and Shared Prosperity 2020: Reversals of Fortune” எனப்படும் இது  உலக வங்கியினால் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியிடப்படும் அறிக்கையாகும்.
  • இது உலகளாவிய வறுமை மற்றும் பகிரப்பட்ட அபிவிருத்தியில் உள்ள போக்குகள் குறித்து சமீபத்திய மற்றும் துல்லியமான கணிப்புகளுடன் உலகக் கண்ணோட்டத்தை அளிக்கின்றது.

சிறப்பம்சங்கள்

  • சராசரி வறுமை நிலையானது கோவிட் – 19  நோய்த் தொற்றின் காரணமாக 3 முதல் 10 ஆண்டுகளுக்குப் பின்னடைவை நோக்கிச் செல்லவிருப்பதாக இந்த ஆய்வானது கண்டறிந்துள்ளது.
  • கோவிட் – 19 நோய்த் தொற்றானது கூடுதலாக 88 மில்லியன் முதல் 115 மில்லியன் மக்களை இந்த வருடம் மிகக் கடுமையான வறுமையில் தள்ளும் என்று கணித்து உள்ளது.
  • கொள்ளை நோய் மற்றும் பொருளாதார மந்த நிலையானது 1.4% உலக மக்கள் தொகையை மிகக் கடுமையான வறுமையில் தள்ள உள்ளது.
  • உலகளாவிய மிகக் கடுமையான வறுமை விகிதமானது 2020 ஆம் ஆண்டில் 1.3% முதல் 9.2% வரை அதிகரிக்கும் என்று கணிக்கப் பட்டுள்ளது.
  • இந்த நோய்த் தொற்று இல்லையென்றால், வறுமை விகிதமானது 2020 ஆம் ஆண்டில் 7.9% ஆகக் குறையும் என்று கணிக்கப் பட்டிருந்தது.
  • ஆப்பிரிக்காவின் துணை சஹாரா பகுதி மற்றும் ஆசியா ஆகியவை உலக வங்கியின் கணிப்பின் படி மிக மோசமான நிலையைச் சந்திக்கவுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்